Tuesday, October 6, 2009

என் டைரியின் பக்கங்களில்....

உன் ஒற்றை சொல்லின் விளிம்பில் மாறிவிடும்
மாற்றங்கள் இருந்தும் மாறாமல் இருப்பது நம் "நட்பு"

மறக்க முடியாத நினைவுகளாய்..
சிரிக்கும் சிறு குழந்தையாய்...
பசுமை நிறைந்த நினைவுகளாய்..
அதிகாலை துயிர்புகலாய் உள்ளது
நம் "நட்பு"

சில வழிகள் வாழ்க்கையை உயர்த்தவா?
அல்லது வாழ்க்கையை சிரழிக்கவா?
என்ற புரியாத புதிரின் விதையாக இருக்கிறது பயணம்....

வாழ்க்கை என்னும் நாடக மேடையில் சாதிக்கும் மனிதனாக இல்லாவிட்டாலும்
ஏமாறும் கோமாளியாக நடிக்க வைக்கும் உலகம் இது....

நான் சொல்லி நீ கேட்க,
நீ சொல்லி நான் கேட்க,
இந்த கடக்கின்ற நிமிடங்கள்
நாளை மறைகின்ற தருணத்தில்
செல்லுபடி ஆகுமோ?

வளர்கையில் புனிதத்தை இழக்கிறோம்,
பசிக்கையில் பாசத்தை இழக்கிறோம்,
இறக்கையில் இவ்வுலகையே இழக்கிறோம்..
இழப்பது வாழ்வில் உறுதி என்றால்....
உன்னை இழப்பதனால் எனக்குள் உண்டாகும் இதய வழியையும் இழப்பேன்
என்ற இயலாமையால் அழுகிறேன்.....

உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்ல...
நல்ல நம்பிக்கையை சிதைக்காமல் இருப்பதே மிக முக்கியம்..
நீ என்றும் என் நம்பிக்கைக்கு உரியவன்....

கதறல் மட்டுமல்ல
கவலை புன்னகையும்
உன் கலைகின்ற பேச்சும்
விட்டுச் செல்லும் உன் மனமும் சுமைகள்
தான்...

காரணம் சொல்லாமல் அழுகின்ற மனசும்
காரணம் தெரியாமல் சிரிக்கிற மனசும்,
உன்னால் தான் எனக்கும் முதலில் கிடைத்தது...

மௌனம் என்னும் டைரியில் கண்ணீர் எழுதிய கவிதை உன் பிரிவு...

கண்ணீரும் ,கவிதைகளும் காதலுக்கு மட்டுமல்ல
கலையாத உண்மை அன்புக்கும் ,நட்புக்கும் தான் கரையாத சொந்தங்கள்.....

நீ தவறுகளை தட்டிக் கேட்டுத் திரித்தியதற்காய் தவிக்கிறேன்!
நாளை செய்யும் தவறுகளை தட்டி கெட்ட யார் இருப்பார்?

கண்ணா நீ புனிதன் தான்...
ஆனால் உன்னைக் காட்டிலும் புனிதம் என்
கைக்குட்டையை நனைத்த அவனால் நான் சிந்தும் கண்ணீர்!

வாழ்க்கை

இங்கே நிகழ்ச்சி நிரல் வண்ணம் நடப்பது ஒன்றும் இல்லை..
நன்றேன்பதேல்லாம் நன்றாக நிற்பதும் இல்லை..
இடம்,பொருள்,காலம் என்ற கணக்கு எதுவும் இதில் சேர்த்தி இல்லை..
இங்கே விதிமுறை என்ற ஒன்று இல்லவே இல்லை..
இது விதிமுறை மீறிய விளையாட்டு..
இந்த விளையாட்டின் பெயர் "வாழ்க்கை".......

தொடர் கதை...

நட்பு என்னும் நூலகத்தில் நான் கண்ட புத்தகம் நீ..
சில புத்தகங்கள் சிறு கதையாய் முடிந்து விட...
நீ மட்டும் என் மனதில் முடியாத தொடர் கதையாய்......

உன் நினைவு..

ஆன்மீகத்திலும் சந்தோசம்,
வெறுமையிலும் புன்னகை,
அளவற்ற மகிழ்ச்சியிலும் பயம்,
சோகத்திலும் சொர்க்கம்,
நிதானதிலும் ஆசை,
முயற்சியிலும் பற்றுதல்,
துக்கத்திலும் அரவணைப்பு நீ.......
நீ மட்டும் என் நினைவில்............

வாழ்க்கை இனிக்கத்தான் செய்கிறது

எல்லா நாளுமே இனிமையாக இருப்பதில்லை
எல்லா நிகழ்வும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை
எல்லா போராட்டத்திலும் வெற்றி காண்பது இல்லை
என்றாலும் எங்கேயோ கண் காணா தூரத்தில்
இருந்தாலும் நம்மையே நினைத்து நம்
கவலைக்காக கண்ணீர் சிந்த ஒரு உயிர்
இருக்கும் வரை வாழ்க்கை இனிக்கத்தான் செய்கிறது..........