Wednesday, December 30, 2009
அப்பா
நடை பழக சொல்லி தந்தாய்....
மழழையில் உன்னை முதன் முதலில் நான் "அக்கா"என்று
அழைத்தபோதும் அகமகிழ்ந்தாய்....
எங்களுக்காக கடினமாய் உழைத்தாய்......
எங்களுக்கு நல்லுடை வாங்கி தந்து
மூன்று தீபாவளிக்கு பழைய உடை நீ அணிந்தாய்.....
ரயில் மற்றும் பேருந்து பயணத்தின் போது
நடைபாதை தின்பண்டம் அனைத்தும் சலைக்காமல் மகிழ்சியோடு வாங்கி தந்தாய்...
நாங்கள் நின்ற இடத்தில் நன்றாக நிற்க நீ இடைவிடாமல் ஓடி கொண்டிருந்தாய்........
நீ சொன்ன அறிவுரைகள் ஏராளம்......
வீட்டினுள் நுழையும் போதே என் பெயர் சொல்லி அழைத்தபடி தான் வருவாய்....
எங்கு சென்றாலும் என்னை பெண்பிள்ளை என்று பாராமல் கூட்டி போவாய்......
நீ எங்கள் மீது காட்டிய பாசங்கள் ஏராளம்.....
இரக்கமாய் இருக்கும் உனக்குள் புற்று நோய் என்னும் கொடிய நோய்.....
நோயால் அவதியுறாமல் நீயோ என்னை பார்த்தவாறே வெகுவிரைவில் சென்று விட்டாய்...
என் இமை மூடும் மட்டும் இந்த வலி என்றும் என் இதயத்தில் நிலைத்திருக்கும்....
நாங்கள் பெரும் வெற்றியை காண இனி நீயில்லை...
சந்தோசத்தை பகிர்ந்திட இனி எனக்கோர் தந்தையில்லை......
பி¡¢வு என்னும் துயரத்தில் எங்களை வீழ்த்திவிட்டு சென்றுவிட்டாய்....
நீ என்னுடன் இருந்த நாட்கள் இனி என் பிறவியில் எப்போது வருமோ?
உனைப்பற்றி எண்ணி கொண்டே இருக்கிறேன்
எனைச்சுற்றி நீ இல்லை......
அந்த கனவுகளை மறந்து விட்டு இனி
எந்த கவிதையை உனக்காய் நான் எழுத?
இன்று இங்கும் அங்கும் உன் அன்பெனும் அழகு முகம்
மங்காமல் மின்னுகின்றன எங்கள் இதயத்தில்.......
எண்ண ஓட்டங்களை வாழ்க்கை ஓட்டங்கள் மறைத்தாலும்
நெஞ்சில் உள்ள உன் அழகு முகம் கவி பேச தவறுவதில்லை.......................
Tuesday, October 6, 2009
என் டைரியின் பக்கங்களில்....
மாற்றங்கள் இருந்தும் மாறாமல் இருப்பது நம் "நட்பு"
மறக்க முடியாத நினைவுகளாய்..
சிரிக்கும் சிறு குழந்தையாய்...
பசுமை நிறைந்த நினைவுகளாய்..
அதிகாலை துயிர்புகலாய் உள்ளது
நம் "நட்பு"
சில வழிகள் வாழ்க்கையை உயர்த்தவா?
அல்லது வாழ்க்கையை சிரழிக்கவா?
என்ற புரியாத புதிரின் விதையாக இருக்கிறது பயணம்....
வாழ்க்கை என்னும் நாடக மேடையில் சாதிக்கும் மனிதனாக இல்லாவிட்டாலும்
ஏமாறும் கோமாளியாக நடிக்க வைக்கும் உலகம் இது....
நான் சொல்லி நீ கேட்க,
நீ சொல்லி நான் கேட்க,
இந்த கடக்கின்ற நிமிடங்கள்
நாளை மறைகின்ற தருணத்தில்
செல்லுபடி ஆகுமோ?
வளர்கையில் புனிதத்தை இழக்கிறோம்,
பசிக்கையில் பாசத்தை இழக்கிறோம்,
இறக்கையில் இவ்வுலகையே இழக்கிறோம்..
இழப்பது வாழ்வில் உறுதி என்றால்....
உன்னை இழப்பதனால் எனக்குள் உண்டாகும் இதய வழியையும் இழப்பேன்
என்ற இயலாமையால் அழுகிறேன்.....
உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்ல...
நல்ல நம்பிக்கையை சிதைக்காமல் இருப்பதே மிக முக்கியம்..
நீ என்றும் என் நம்பிக்கைக்கு உரியவன்....
கதறல் மட்டுமல்ல
கவலை புன்னகையும்
உன் கலைகின்ற பேச்சும்
விட்டுச் செல்லும் உன் மனமும் சுமைகள்
தான்...
காரணம் சொல்லாமல் அழுகின்ற மனசும்
காரணம் தெரியாமல் சிரிக்கிற மனசும்,
உன்னால் தான் எனக்கும் முதலில் கிடைத்தது...
மௌனம் என்னும் டைரியில் கண்ணீர் எழுதிய கவிதை உன் பிரிவு...
கண்ணீரும் ,கவிதைகளும் காதலுக்கு மட்டுமல்ல
கலையாத உண்மை அன்புக்கும் ,நட்புக்கும் தான் கரையாத சொந்தங்கள்.....
நீ தவறுகளை தட்டிக் கேட்டுத் திரித்தியதற்காய் தவிக்கிறேன்!
நாளை செய்யும் தவறுகளை தட்டி கெட்ட யார் இருப்பார்?
கண்ணா நீ புனிதன் தான்...
ஆனால் உன்னைக் காட்டிலும் புனிதம் என்
கைக்குட்டையை நனைத்த அவனால் நான் சிந்தும் கண்ணீர்!
வாழ்க்கை
நன்றேன்பதேல்லாம் நன்றாக நிற்பதும் இல்லை..
இடம்,பொருள்,காலம் என்ற கணக்கு எதுவும் இதில் சேர்த்தி இல்லை..
இங்கே விதிமுறை என்ற ஒன்று இல்லவே இல்லை..
இது விதிமுறை மீறிய விளையாட்டு..
இந்த விளையாட்டின் பெயர் "வாழ்க்கை".......
தொடர் கதை...
சில புத்தகங்கள் சிறு கதையாய் முடிந்து விட...
நீ மட்டும் என் மனதில் முடியாத தொடர் கதையாய்......
உன் நினைவு..
வெறுமையிலும் புன்னகை,
அளவற்ற மகிழ்ச்சியிலும் பயம்,
சோகத்திலும் சொர்க்கம்,
நிதானதிலும் ஆசை,
முயற்சியிலும் பற்றுதல்,
துக்கத்திலும் அரவணைப்பு நீ.......
நீ மட்டும் என் நினைவில்............
வாழ்க்கை இனிக்கத்தான் செய்கிறது
எல்லா நிகழ்வும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை
எல்லா போராட்டத்திலும் வெற்றி காண்பது இல்லை
என்றாலும் எங்கேயோ கண் காணா தூரத்தில்
இருந்தாலும் நம்மையே நினைத்து நம்
கவலைக்காக கண்ணீர் சிந்த ஒரு உயிர்
இருக்கும் வரை வாழ்க்கை இனிக்கத்தான் செய்கிறது..........
Saturday, September 26, 2009
வாழ்க்கை !
நம்மை வாழ்க்கை அலைக்கழித்த போதும்,
வாழ்ந்து வாழ்ந்து பூர்த்தி செய்கின்றோம்…
ஒவ்வொன்றையும் அடைய நினைக்கின்றோம்…
என்னவென்று யோசித்துப் பார்த்தால்,
முடிவற்ற ஒரு இருளின் நடுவே
ஒளி(ர்)ந்து சிரிக்கிறது வாழ்க்கை !
Monday, September 14, 2009
சொல்லாத சோகங்கள்
செல்லமாய் , கொஞ்சி வளர்க்கும்,
வீட்டு நாய் குட்டிக்கும் இருக்கும்...
தாயை பிரிந்த பெருஞ்சோகம்!
தன்னில் உயிர்த்திருந்த தன் மகனின் மன நாளில்,
சொல்லத் தெரியாமல் வந்தெழும்
தாயின் நெஞ்சுக்குழியில்
ஏதோவொரு வெறும் சோகம்!
தண்டவாளத்து ரெயில் சத்தம்,
எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும்...
யாரோ,யாரையோ
பிரியுமொரு சோகம்!
தன் பெயர் கொண்ட முதல் குழந்தையுடன்
அவளைக் காணும் போதெல்லாம் அவனுக்கும்
தொண்டைக் குழியை வந்திருக்கும்
தொற்று போன காதலின் சோகம்!!
Tuesday, August 18, 2009
Life

Thursday, August 13, 2009
கிருஷ்ணா
பிறந்த நாள் பரிசு
இந்த பிறந்த நாளை என்னால மறக்கவே முடியாது.....
முதன் முதலா விடுதியில் கொண்டாடும் முதல் பிறந்த நாள்......
எனக்கு பிரெண்ட்ஸ் ஜாஸ்தி.....எல்லாரும் சேர்ந்து எனக்கு கேக் வாங்கி அத கட் பண்ண வச்சு என் உயிரை வாங்கிடாங்க......
அவங்க எனக்காக என்ன கொஞ்சம் ஓட்டிஒரு கவிதை ங்கறபேர்ல ஒன்னு எழுதி கொடுத்தாங்க...அவங்களுக்காக அவங்கள நியாபகம் படுத்தி அந்த கவிதை யா ப்லோக் ல போடலாம்னு முடிவு பணிருகேன்......
எல்லாருக்கும் ரெம்ப நன்றி,
சக்தி,
உனக்கு பிடிச்ச கார்டூன் ட்வீட்டி,
அதை ரசிக்கிற நீ ஒரு ஸ்வீட்டி!
நீ விரும்பி போகிற இடம் இஷ்கான்,
அங்கே போகலேன்னா உன் மனசு ஆகிடும் நமத்து போன பாப்கான்!
கிருஷ்ணர் வைல தெரிஞ்சது உலகம்,
ஆனா உனக்கு அந்த கிருஷ்ணர் தான் உலகம்!
நீ அடிக்கடி சொல்லும் வார்த்தை கிருஷ்ணா
அவருக்கு நீ என்ன ஃபேனா!
நீ அடிக்கடி கொடுப்பது அட்வைசு,
அதுக்கு பயந்து ஓடுவது பல மனசு!
டென்டுல்கர் அடிப்பது சென்சுரி,
எங்களுக்கு நீ செஞ்சு தர்றதா சொன்னது கோபி மஞ்ஜூரி!
சினிமாவுக்கு கெடச்சது வைரமுத்து,
ஆனா உங்க ஸ்கூலுக்கு நீ ஒரு கவிமுத்து!
நீ அடிக்கடி பிடிப்பது ஆவி,
உன்னால கஷ்டப்படுவதோ ஒரு அப்பாவி!
மதுரைக்கு ஃபேமஸ் மல்லி,
ப்ரோக்ராம்ல நீ ஒரு கில்லி!
உனக்கு பிடிச்சது சப்போட்டா,
எப்பவும் நாங்க இருப்போம் உனக்கு சப்போட்டா!
நட்புடன்,
அனு,ப்ரின்சி,சத்யா,வித்யா மற்றும் புவனா.......
:) ரெம்ப ரெம்ப நன்றி தோழிகளே......
எனக்காக என் பிறந்த நாள் பார்ட்டில கலந்து கிட்ட சக்தி பிரியன்,ரெங்க நாதன்,ராஜேஷ்,குணா,அச்யுட்,பூர்ணிமா,ஹரிணி,வித்யா எல்லாருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுருக்கேன்......தேங்க்ஸ் எ லாட் மை பிரண்ட்ஸ்......
Thursday, July 2, 2009
நட்பு
நான் சிரிக்காமல் கழித்த தருணங்கள்
நான் ரசிக்காமல் போன செய்கைகள்
நான் பேசாமல் விட்ட வார்த்தைகள்
நான் கவலையாக நினைத்த கடமைகள்
இவை எல்லாம் சந்தோசமாக துளிர்கின்றன உன்னுடன் நட்பை இருக்கும் போது
நான் யாரிடமும் தோற்றதில்லை நேற்று வரை..
இன்றோ தோழமைக்காய் தோற்கிறேன் உன்னிடம்
பலனை எதிர்பார்த்து பாசம் பொழிகையில்
பாசத்தையே பலனாய் எதிர்பார்த்த நம் நட்பு.
இன்னொரு முறை நாம் பிறக்காவிட்டாலும் நம் இதயங்களை நட்பு காற்றில்
சுவாசிக்க விட செய்யும் நம் அன்பின் சுக பிரசவங்களுக்காய் நான் இறைவனை வேண்டுகிறேன்.