Monday, March 15, 2010
ஐ.டி வாழ்க்கை - 2
Monday, March 8, 2010
ஐ.டி வாழ்கை - 1
கதை எழுதனும்னு ரெம்ப நாளாக நெனச்சேன்..இப்பொழுது தொடர்கிறேன் என் கதையை..இது உண்மையும் கொஞ்சம் கற்பனையும் கலந்த கதை....
அவர்கள் மூன்று பேர் ராதிகா,பூமிகா,சாவித்த்ரி ..
மூணு பேரும் ஒரே காலேஜ் ல படிச்சு கேம்பஸ் ல செலக்ட் ஆயிட்டாங்க...
சாவித்திரி,ராதிகா ஒரே கிளாஸ் பட் பூமிகா வேற டிபாட்மென்ட்..
இருந்தாலும் ஒரே கம்பெனி ல வேல கிடைச்ச திருப்தியில் எல்லோரும் நண்பர்களாக பழகினர்..
அன்று தான் முதல் நாள் எல்லோரும் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டு ரெயிலுக்காக காத்துகொண்டு இருந்தனர்...பலர் கண்ணில் சந்தோசங்கள்,சிலர் கண்ணில் பயங்கள்......பரபரப்பாக இருந்தது ரெயில் நிலையம்...
வெவேறு காலேஜ் இல் இருந்து அதே கம்பெனியில் செலக்ட் ஆன நிறைய மாணவர்கள் வந்திருந்தனர்..
ஒவ்வொருவர் கண்களிலும் பல சந்தோசங்கள்..புதிதாக ஒரு ஊருக்கு போக போறோம் என்ற மகிழ்ச்சி ஒரு புறம்,பெரிய கம்பெனியில் வேலை பார்க்க போகிறோம் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம்
அவங்க எல்லாம் கேம்பசில் செலக்ட் ஆன பெருமிதத்தோடு வழி அனுப்பி கொண்டிருந்தார்கள் பெற்றோர்கள்....
சில பெற்றோர்கள் உடன் வந்தார்கள்..ரெயில் செலவை கம்பெனி பொறுபேற்கும் என்ற தைரியத்தில் அன்று தான் மற்ற காலேஜ் தோழர்கள்,தோழிகள் பிரஸ்ட் கிளாஸ் ஏசி புக் செய்திருந்தனர்.. இவர்கள் மூவர்கோ தெரியாது ,இதை கேள்வி பட்ட ராதிகாவின் அம்மா மற்றும் சாவித்ரியின் அம்மா மிகவும் வருத்தம் பட்டனர்..இப்படி எதிர்பார்ப்புகளோடு புறப்பட்டது இவர்கள் பயணம்....
சாவித்திரி மற்றும் ராதிகா காலேஜ் முடித்தவுடன் ஒரு சிறிய கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தனர்...(சாப்ட்வேர் டெவலப்பர் )
அங்கிருந்த தோழர்கள் அவர்களை வழி அனுப்ப வந்திருந்தனர்.....
பல வித எதிர்பார்புகளோடு புறப்பட்டது பயணம்.................
தொடரும் வாழ்கை....