Monday, March 15, 2010

ஐ.டி வாழ்க்கை - 2

இரயில் தடதடக்கும் சத்தம் சங்கீதமாக இருந்தது மூவருக்கும்...சாவித்ரி எப்போதுமே வீட்டின் மேல் பற்று கொண்டவள், இது வரை தனியாக எங்கும் சென்றதே இல்லை, கல்லூரிப் படிப்பு கூட உள்ளூரிலே தான். அவளுக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது...எவ்வாறு ஹாஸ்டலில் தங்க போகிறோம் என்று....
இவர்களுடன் ரெயிலில் இரு தோழர்கள் அறிமுகமாயினர்.....இவர்கள் சாவித்ரி மூலமே அறிமுகமாயினர்....

(அன்று சாவித்த்ரி, அவள் அத்தை ரேகா மற்றும் அவள் அம்மா விமலா மூவரும் பெங்களூர் செல்வதற்காக பெரிய சூட்கேஸ் வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருந்தனர்...ஒரு கடையில் பெரிய சூட்கேஸ் ஐ பார்த்து விலை பேசிக் கொன்டிருந்தனர்..
அப்பொழுது, இருவர் அந்த கடையினுள் நுழைந்து சாவித்ரி பக்கமாக வந்து சூட்கேஸ் வாங்க வேண்டாம் என்று சைகை செய்தனர். புதிதாக யாரோ இருவர் வந்து சைகை செய்ததை பார்த்து பயந்து, அம்மாவிடம் மெதுவாக சாவித்ரி சொல்ல ஆரம்பித்தாள்.
"யாரோ பசங்க ரெண்டு பேர் வாசல்ல நின்னுகிட்டு வாங்க வேண்டாம் ன்னு சொல்றாங்கம்மா" னு அவள் புலம்ப, அத்தை மெதுவாக இருவரையும் கூட்டிக் கொண்டு அந்த கடையை விட்டு வெளியே (நாங்க விலை விசாரித்து விட்டு வருகிறோம் என்று)வந்தாள்... அந்த கடைக்காரருக்கு வாடிக்கையாளர் போய் விடுவாரோ என்ற பயம் ஒருபுறம் இருக்க, அந்த பசங்களை பார்த்து ஒரே முறைப்பு வேறு...

வெளியே வந்தவுடன்,அந்த பசங்களைப் பார்த்து, "என்னப்பா என்ன விசயம், ஏன் வாங்க வேண்டாம்னு சொல்றீங்க?" னு அத்தை விசாரித்தார்...
அவர்களோ, "சாவித்த்ரியை முன்னமே எங்களுக்குத் தெரியும்" ன்னு சொன்னாங்க.
சாவித்த்ரி உடனே "அம்மா எனக்கு இவங்களைத் தெரியவே தெரியாது" னு சொல்ல, ஒரே குழப்பம், அவங்க அம்மா முகத்தில்...."சாவித்த்ரிக்கு எங்களைத் தெரியாது ஆன்டி. எங்களுக்குத் தான் அவளைத் தெரியும்" னு சொல்லி இன்னும் குழப்பம் ஏற்படுத்தினர்.
"நீங்க பெங்களூர் போகத் தானே ஆன்டி சூட்கேஸ் வாங்குறீங்க, நாங்களும் சாவித்த்ரி செலெக்ட் ஆன அதே கம்பெனியில் தான் செலெக்ட் ஆகிருக்கோம், சாவித்த்ரி ஃபோட்டோவை நாங்க ஃபிலேஸ்டு ஆனவங்க லிஸ்ட் ல பாத்துருக்ககோம்" னு சொன்னாங்க .
"இந்த கடைல நாங்க விசாரிச்சோம் ஆன்டி, ரெம்ப விலை சொல்றான். அதான் ஒரே கம்பெனி ல வொர்க் பண்ண போறோம்,அதான் ஒரு சின்ன ஹெல்ப், நாங்க இப்ப தான் சூட்கேஸ் வாங்கினோம்" னு சொல்லி ஒரு கடையில் மிகவும் மலிவாக வாங்கித் தந்தனர்.
ரொம்ப தேங்க்ஸ் னு சொல்லி அப்போ தான் சாவித்த்ரி அவங்க பெயரையேக் கேட்டாள்.
அப்பாடா, இப்பவாவது பேசினீங்களே, சந்தோசம் னு சொல்லி அவர்களது பெயரை சொன்னார்கள், ஜெயராம், கல்கி என்று...)

இவர்களை ஒரு நிமிடம் ரெயில் நிலையத்தில் பார்த்ததும், மறுபடியும் பயம் தான் வந்தது சாவித்ரிக்கு... அவள் அம்மா தான் நடந்த கதையை பூமிகா,ராதிகா மற்றும் அவர்களது பெற்றோரிடம் சொன்னார்......நிம்மதி அடைந்தாள் சாவித்த்ரி.

ஆனால் அவர்களின் தோற்றம் அவளுக்கு சிரிப்பைத் தந்தது. ஏன்னா அவங்க மறுநாள் தான் பெங்களூர் போய் சேர்வார்கள், ஆனால் இப்பவே ஸ்வெட்டர், குல்லா, கூலிங் கிளாஸ் எல்லாம் அணிந்திருந்தனர். இன்னும் பெங்களூர் போகவே இல்ல, அதுகுள்ள இவ்வளவு அலட்டலா னு தோணுச்சு சவித்த்ரிக்கு. அதையே அவள் தோழிகளும் கிண்டல் செய்தனர்.

ஏனோ மனதினுள், நாம் பிறந்த ஊரை விட்டு போகிறோமே என்ற எண்ணம் மனதினுள் அழுத்த, அழுகையுடன் தான் சென்றாள் சாவித்த்ரி மட்டும்...............

தொடரும் வாழ்க்கை...................

Monday, March 8, 2010

இன்றைய படிப்பு

அறிவுரைகள் சொல்லி கொடுக்க தவறும் ஆசிரியர்....

ஆசிரியர்களின் கோவத்தை பொறுக்காத மாணவர்கள்....

பேருந்து நெரிசலில் ஆசிரியர் நிற்பதை பார்த்து சந்தோசப்படும் மாணவர்கள்...

புரிந்தும் புரியாமலும் நோட்ஸ் எடுக்கும் வகுப்பறைகள்...

ஏன் என கேள்வி கேட்க தெரியாத சிந்தனையாளர்கள்.....

தான் எடுப்பது தனக்கே ஒரு தரம் கேட்டால் என்ன என்று சொல்ல தெரியாமல் விழிக்கும் அரை குறை ஆசிரியர்கள்..............

முப்பது நிமிடங்களுக்கு மேல் பொறுமையாக கவனிக்க முடியாமல் நெளியும் மாணவர்கள்,

சிந்தனைகளை வளர்க்காத , பாஸ் செய்ய மட்டும் செய்தால் போதும் என சொல்லும் மேலாளர்கள்,

இதற்கோ மாலை முழுவதும் ஸ்பெஷல் கிளாஸ்.....

இப்படி அரை குறை கல்வியில் கழிகிறது இன்றைய படிப்பு.........

ஐ.டி வாழ்கை - 1

கதை எழுதனும்னு ரெம்ப நாளாக நெனச்சேன்..இப்பொழுது தொடர்கிறேன் என் கதையை..இது உண்மையும் கொஞ்சம் கற்பனையும் கலந்த கதை....

அவர்கள் மூன்று பேர் ராதிகா,பூமிகா,சாவித்த்ரி ..

மூணு பேரும் ஒரே காலேஜ் ல படிச்சு கேம்பஸ் ல செலக்ட் ஆயிட்டாங்க...

சாவித்திரி,ராதிகா ஒரே கிளாஸ் பட் பூமிகா வேற டிபாட்மென்ட்..

இருந்தாலும் ஒரே கம்பெனி ல வேல கிடைச்ச திருப்தியில் எல்லோரும் நண்பர்களாக பழகினர்..

அன்று தான் முதல் நாள் எல்லோரும் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டு ரெயிலுக்காக காத்துகொண்டு இருந்தனர்...பலர் கண்ணில் சந்தோசங்கள்,சிலர் கண்ணில் பயங்கள்......பரபரப்பாக இருந்தது ரெயில் நிலையம்...

வெவேறு காலேஜ் இல் இருந்து அதே கம்பெனியில் செலக்ட் ஆன நிறைய மாணவர்கள் வந்திருந்தனர்..

ஒவ்வொருவர் கண்களிலும் பல சந்தோசங்கள்..புதிதாக ஒரு ஊருக்கு போக போறோம் என்ற மகிழ்ச்சி ஒரு புறம்,பெரிய கம்பெனியில் வேலை பார்க்க போகிறோம் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம்

அவங்க எல்லாம் கேம்பசில் செலக்ட் ஆன பெருமிதத்தோடு வழி அனுப்பி கொண்டிருந்தார்கள் பெற்றோர்கள்....

சில பெற்றோர்கள் உடன் வந்தார்கள்..ரெயில் செலவை கம்பெனி பொறுபேற்கும் என்ற தைரியத்தில் அன்று தான் மற்ற காலேஜ் தோழர்கள்,தோழிகள் பிரஸ்ட் கிளாஸ் ஏசி புக் செய்திருந்தனர்.. இவர்கள் மூவர்கோ தெரியாது ,இதை கேள்வி பட்ட ராதிகாவின் அம்மா மற்றும் சாவித்ரியின் அம்மா மிகவும் வருத்தம் பட்டனர்..இப்படி எதிர்பார்ப்புகளோடு புறப்பட்டது இவர்கள் பயணம்....

சாவித்திரி மற்றும் ராதிகா காலேஜ் முடித்தவுடன் ஒரு சிறிய கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தனர்...(சாப்ட்வேர் டெவலப்பர் )

அங்கிருந்த தோழர்கள் அவர்களை வழி அனுப்ப வந்திருந்தனர்.....

பல வித எதிர்பார்புகளோடு புறப்பட்டது பயணம்.................

தொடரும் வாழ்கை....

Wednesday, December 30, 2009

அப்பா

பிஞ்சு விரல் கைப்பிடித்து
நடை பழக சொல்லி தந்தாய்....
மழழையில் உன்னை முதன் முதலில் நான் "அக்கா"என்று
அழைத்தபோதும் அகமகிழ்ந்தாய்....
எங்களுக்காக கடினமாய் உழைத்தாய்......
எங்களுக்கு நல்லுடை வாங்கி தந்து
மூன்று தீபாவளிக்கு பழைய உடை நீ அணிந்தாய்.....
ரயில் மற்றும் பேருந்து பயணத்தின் போது
நடைபாதை தின்பண்டம் அனைத்தும் சலைக்காமல் மகிழ்சியோடு வாங்கி தந்தாய்...
நாங்கள் நின்ற இடத்தில் நன்றாக நிற்க நீ இடைவிடாமல் ஓடி கொண்டிருந்தாய்........
நீ சொன்ன அறிவுரைகள் ஏராளம்......
வீட்டினுள் நுழையும் போதே என் பெயர் சொல்லி அழைத்தபடி தான் வருவாய்....
எங்கு சென்றாலும் என்னை பெண்பிள்ளை என்று பாராமல் கூட்டி போவாய்......
நீ எங்கள் மீது காட்டிய பாசங்கள் ஏராளம்.....
இரக்கமாய் இருக்கும் உனக்குள் புற்று நோய் என்னும் கொடிய நோய்.....
நோயால் அவதியுறாமல் நீயோ என்னை பார்த்தவாறே வெகுவிரைவில் சென்று விட்டாய்...
என் இமை மூடும் மட்டும் இந்த வலி என்றும் என் இதயத்தில் நிலைத்திருக்கும்....
நாங்கள் பெரும் வெற்றியை காண இனி நீயில்லை...
சந்தோசத்தை பகிர்ந்திட இனி எனக்கோர் தந்தையில்லை......
பி¡¢வு என்னும் துயரத்தில் எங்களை வீழ்த்திவிட்டு சென்றுவிட்டாய்....
நீ என்னுடன் இருந்த நாட்கள் இனி என் பிறவியில் எப்போது வருமோ?
உனைப்பற்றி எண்ணி கொண்டே இருக்கிறேன்
எனைச்சுற்றி நீ இல்லை......
அந்த கனவுகளை மறந்து விட்டு இனி
எந்த கவிதையை உனக்காய் நான் எழுத?
இன்று இங்கும் அங்கும் உன் அன்பெனும் அழகு முகம்
மங்காமல் மின்னுகின்றன எங்கள் இதயத்தில்.......
எண்ண ஓட்டங்களை வாழ்க்கை ஓட்டங்கள் மறைத்தாலும்
நெஞ்சில் உள்ள உன் அழகு முகம் கவி பேச தவறுவதில்லை.......................

Tuesday, October 6, 2009

என் டைரியின் பக்கங்களில்....

உன் ஒற்றை சொல்லின் விளிம்பில் மாறிவிடும்
மாற்றங்கள் இருந்தும் மாறாமல் இருப்பது நம் "நட்பு"

மறக்க முடியாத நினைவுகளாய்..
சிரிக்கும் சிறு குழந்தையாய்...
பசுமை நிறைந்த நினைவுகளாய்..
அதிகாலை துயிர்புகலாய் உள்ளது
நம் "நட்பு"

சில வழிகள் வாழ்க்கையை உயர்த்தவா?
அல்லது வாழ்க்கையை சிரழிக்கவா?
என்ற புரியாத புதிரின் விதையாக இருக்கிறது பயணம்....

வாழ்க்கை என்னும் நாடக மேடையில் சாதிக்கும் மனிதனாக இல்லாவிட்டாலும்
ஏமாறும் கோமாளியாக நடிக்க வைக்கும் உலகம் இது....

நான் சொல்லி நீ கேட்க,
நீ சொல்லி நான் கேட்க,
இந்த கடக்கின்ற நிமிடங்கள்
நாளை மறைகின்ற தருணத்தில்
செல்லுபடி ஆகுமோ?

வளர்கையில் புனிதத்தை இழக்கிறோம்,
பசிக்கையில் பாசத்தை இழக்கிறோம்,
இறக்கையில் இவ்வுலகையே இழக்கிறோம்..
இழப்பது வாழ்வில் உறுதி என்றால்....
உன்னை இழப்பதனால் எனக்குள் உண்டாகும் இதய வழியையும் இழப்பேன்
என்ற இயலாமையால் அழுகிறேன்.....

உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்ல...
நல்ல நம்பிக்கையை சிதைக்காமல் இருப்பதே மிக முக்கியம்..
நீ என்றும் என் நம்பிக்கைக்கு உரியவன்....

கதறல் மட்டுமல்ல
கவலை புன்னகையும்
உன் கலைகின்ற பேச்சும்
விட்டுச் செல்லும் உன் மனமும் சுமைகள்
தான்...

காரணம் சொல்லாமல் அழுகின்ற மனசும்
காரணம் தெரியாமல் சிரிக்கிற மனசும்,
உன்னால் தான் எனக்கும் முதலில் கிடைத்தது...

மௌனம் என்னும் டைரியில் கண்ணீர் எழுதிய கவிதை உன் பிரிவு...

கண்ணீரும் ,கவிதைகளும் காதலுக்கு மட்டுமல்ல
கலையாத உண்மை அன்புக்கும் ,நட்புக்கும் தான் கரையாத சொந்தங்கள்.....

நீ தவறுகளை தட்டிக் கேட்டுத் திரித்தியதற்காய் தவிக்கிறேன்!
நாளை செய்யும் தவறுகளை தட்டி கெட்ட யார் இருப்பார்?

கண்ணா நீ புனிதன் தான்...
ஆனால் உன்னைக் காட்டிலும் புனிதம் என்
கைக்குட்டையை நனைத்த அவனால் நான் சிந்தும் கண்ணீர்!

வாழ்க்கை

இங்கே நிகழ்ச்சி நிரல் வண்ணம் நடப்பது ஒன்றும் இல்லை..
நன்றேன்பதேல்லாம் நன்றாக நிற்பதும் இல்லை..
இடம்,பொருள்,காலம் என்ற கணக்கு எதுவும் இதில் சேர்த்தி இல்லை..
இங்கே விதிமுறை என்ற ஒன்று இல்லவே இல்லை..
இது விதிமுறை மீறிய விளையாட்டு..
இந்த விளையாட்டின் பெயர் "வாழ்க்கை".......

தொடர் கதை...

நட்பு என்னும் நூலகத்தில் நான் கண்ட புத்தகம் நீ..
சில புத்தகங்கள் சிறு கதையாய் முடிந்து விட...
நீ மட்டும் என் மனதில் முடியாத தொடர் கதையாய்......

உன் நினைவு..

ஆன்மீகத்திலும் சந்தோசம்,
வெறுமையிலும் புன்னகை,
அளவற்ற மகிழ்ச்சியிலும் பயம்,
சோகத்திலும் சொர்க்கம்,
நிதானதிலும் ஆசை,
முயற்சியிலும் பற்றுதல்,
துக்கத்திலும் அரவணைப்பு நீ.......
நீ மட்டும் என் நினைவில்............

வாழ்க்கை இனிக்கத்தான் செய்கிறது

எல்லா நாளுமே இனிமையாக இருப்பதில்லை
எல்லா நிகழ்வும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை
எல்லா போராட்டத்திலும் வெற்றி காண்பது இல்லை
என்றாலும் எங்கேயோ கண் காணா தூரத்தில்
இருந்தாலும் நம்மையே நினைத்து நம்
கவலைக்காக கண்ணீர் சிந்த ஒரு உயிர்
இருக்கும் வரை வாழ்க்கை இனிக்கத்தான் செய்கிறது..........

Saturday, September 26, 2009

வாழ்க்கை !

நம்மை வாழ்க்கை அலைக்கழித்த போதும்,

வாழ்ந்து வாழ்ந்து பூர்த்தி செய்கின்றோம்…

எல்லாமே மாறிவிடும் என்று தெரிந்தும்

ஒவ்வொன்றையும் அடைய நினைக்கின்றோம்…

இந்த வாழ்க்கையின் முடிவு தான்

என்னவென்று யோசித்துப் பார்த்தால்,

முடிவற்ற ஒரு இருளின் நடுவே

ஒளி(ர்)ந்து சிரிக்கிறது வாழ்க்கை !

Monday, September 14, 2009

சொல்லாத சோகங்கள்

செல்லமாய் , கொஞ்சி வளர்க்கும்,

வீட்டு நாய் குட்டிக்கும் இருக்கும்...

தாயை பிரிந்த பெருஞ்சோகம்!

தன்னில் உயிர்த்திருந்த தன் மகனின் மன நாளில்,

சொல்லத் தெரியாமல் வந்தெழும்

தாயின் நெஞ்சுக்குழியில்

ஏதோவொரு வெறும் சோகம்!

தண்டவாளத்து ரெயில் சத்தம்,

எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும்...

யாரோ,யாரையோ

பிரியுமொரு சோகம்!

தன் பெயர் கொண்ட முதல் குழந்தையுடன்

அவளைக் காணும் போதெல்லாம் அவனுக்கும்

தொண்டைக் குழியை வந்திருக்கும்

தொற்று போன காதலின் சோகம்!!

Tuesday, August 18, 2009

Life


In the picture, just look at their condition.. no place to sleep, still they have made some space for d cat n d dog... water poring from the roof but still each 1 of them have a peaceful smile on their face.. Simply amazing!!!!!
"The happiest people in the world are not those who have no problems, but those who learn to live with things that are less than perfect"



Thursday, August 13, 2009

கிருஷ்ணா

உலகத்திலேயே நா ரெம்ப நேசிக்கிறது கிருஷ்ணர் தான் ......
ஹாப்பி கிருஷ்ணா ஜெயந்தி ...


Since LOVE is KRISHNA!!!



































































பிறந்த நாள் பரிசு

இந்த பிறந்த நாளை என்னால மறக்கவே முடியாது.....

முதன் முதலா விடுதியில் கொண்டாடும் முதல் பிறந்த நாள்......

எனக்கு பிரெண்ட்ஸ் ஜாஸ்தி.....எல்லாரும் சேர்ந்து எனக்கு கேக் வாங்கி அத கட் பண்ண வச்சு என் உயிரை வாங்கிடாங்க......

அவங்க எனக்காக என்ன கொஞ்சம் ஓட்டிஒரு கவிதை ங்கறபேர்ல ஒன்னு எழுதி கொடுத்தாங்க...அவங்களுக்காக அவங்கள நியாபகம் படுத்தி அந்த கவிதை யா ப்லோக் ல போடலாம்னு முடிவு பணிருகேன்......

எல்லாருக்கும் ரெம்ப நன்றி,

சக்தி,

உனக்கு பிடிச்ச கார்டூன் ட்வீட்டி,

அதை ரசிக்கிற நீ ஒரு ஸ்வீட்டி!
நீ விரும்பி போகிற இடம் இஷ்கான்,

அங்கே போகலேன்னா உன் மனசு ஆகிடும் நமத்து போன பாப்கான்!

கிருஷ்ணர் வைல தெரிஞ்சது உலகம்,

ஆனா உனக்கு அந்த கிருஷ்ணர் தான் உலகம்!

நீ அடிக்கடி சொல்லும் வார்த்தை கிருஷ்ணா

அவருக்கு நீ என்ன ஃபேனா!

நீ அடிக்கடி கொடுப்பது அட்வைசு,

அதுக்கு பயந்து ஓடுவது பல மனசு!

டென்டுல்கர் அடிப்பது சென்சுரி,

எங்களுக்கு நீ செஞ்சு தர்றதா சொன்னது கோபி மஞ்ஜூரி!

சினிமாவுக்கு கெடச்சது வைரமுத்து,

ஆனா உங்க ஸ்கூலுக்கு நீ ஒரு கவிமுத்து!

நீ அடிக்கடி பிடிப்பது ஆவி,

உன்னால கஷ்டப்படுவதோ ஒரு அப்பாவி!

மதுரைக்கு ஃபேமஸ் மல்லி,

ப்ரோக்ராம்ல நீ ஒரு கில்லி!

உனக்கு பிடிச்சது சப்போட்டா,

எப்பவும் நாங்க இருப்போம் உனக்கு சப்போட்டா!


நட்புடன்,

அனு,ப்ரின்சி,சத்யா,வித்யா மற்றும் புவனா.......

:) ரெம்ப ரெம்ப நன்றி தோழிகளே......

எனக்காக என் பிறந்த நாள் பார்ட்டில கலந்து கிட்ட சக்தி பிரியன்,ரெங்க நாதன்,ராஜேஷ்,குணா,அச்யுட்,பூர்ணிமா,ஹரிணி,வித்யா எல்லாருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுருக்கேன்......தேங்க்ஸ் எ லாட் மை பிரண்ட்ஸ்......

Thursday, July 2, 2009

நட்பு

கண்ணுக்கு எட்டாத தூரத்தில் நீ இருந்தாலும் கண் இமைக்கும் நேரத்தில் வந்து செல்லும் உன் நினைவுகள் தான் நம் நட்புக்கு இன்னும் உயிர் கொடுத்து கொண்டே இருக்கிறது.

நான் சிரிக்காமல் கழித்த தருணங்கள்
நான் ரசிக்காமல் போன செய்கைகள்
நான் பேசாமல் விட்ட வார்த்தைகள்
நான் கவலையாக நினைத்த கடமைகள்
இவை எல்லாம் சந்தோசமாக துளிர்கின்றன உன்னுடன் நட்பை இருக்கும் போது

நான் யாரிடமும் தோற்றதில்லை நேற்று வரை..
இன்றோ தோழமைக்காய் தோற்கிறேன் உன்னிடம்

பலனை எதிர்பார்த்து பாசம் பொழிகையில்
பாசத்தையே பலனாய் எதிர்பார்த்த நம் நட்பு.

இன்னொரு முறை நாம் பிறக்காவிட்டாலும் நம் இதயங்களை நட்பு காற்றில்
சுவாசிக்க விட செய்யும் நம் அன்பின் சுக பிரசவங்களுக்காய் நான் இறைவனை வேண்டுகிறேன்.

Thursday, May 21, 2009

நீ

உன்னை தொலைத்து என்னுள் ஊடுறிவி சென்றவன் நீ...........

Friday, November 7, 2008

வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினில் இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்

தரணியில் பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்

காரியத்தில் உறுதி வேண்டும்

மண் பயனுற வேண்டும்

வானம் இங்கு தென் பட வேண்டும்

உண்மை நின்றிட வேண்டும்
............................................................................................

உலகமே இதற்கு மாற வேண்டும்

ஒவ்வொரு மனிதனும் இதை முதலில் நினைக்க வேண்டும்........

Thursday, November 6, 2008

School

ஒரே கூட்டில் சிட்டு குஞ்சுகளாக இருந்த எங்களை தனியே பறக்க பழகிய பள்ளி ...
எங்களிடையே தோன்றிய அர்த்தமற்ற சண்டைகளை நியாபகப்படுத்தும் பள்ளி.....
நாங்கள் இசைத்த மகிழ்ச்சி ராகங்கள் தான் எத்தனை எத்தனை..என்றும் எங்கள் மனதில் பாய காரணமான பள்ளி..
ஒன்றும் தெரியாத எங்களை அறிவாளி ஆக்கியதும்,
கவியாளன் ஆக்கியதும்,பாடகன் ஆக்கியதும்,பேச்சாளன் ஆக்கியதும் இந்த பள்ளி தான்...
நட்சத்திர குவியலோடு எங்களது கற்பனையும் மன குவியலோடு நாங்களும் விளையாடி மழிந்ததைதான் மறக்க முடியுமா?
என் மன கண்ணாடியில் என்றும் எனது இந்த பள்ளி மற்றும் குருவின் முகம்....
என் அக கண்ணாடியில் உள்ள பிரிவு என்று நான் பிரிந்த எனது பள்ளி வாழ்க்கை என்னும் விரிசலை எவ்வாறு சரி செய்ய?
எனது பள்ளி பிரிவை நினைத்து கண்களில் நீர் வழிந்தாலும்
வெற்றி என்னும் இதழ் பூக்கள் பூக்க புன்னகை மகரந்தத்தை தூவி விட்டு தான் நாங்கள் எல்லாரும் எங்கள் பள்ளியை பிரிந்து வந்தோம்...
எங்கள் மனசுவடுகளில் என்றும் அழியாமல் பதிந்திருக்கும் மங்கயர்கரசியின் நினைவுகள்...............................

vaazhkai

வாழ்கை என்பது என்ன ?
சம்பதிப்பா ,லட்சியமா,நிம்மதியா,பாசமா?
இவையனைத்தும் இருந்தால் தான் அது வாழ்க்கை....
வாழ்கையை வாழ்ந்து வாழ்ந்து பூர்த்தி செய்கின்றோம் ஆனாலும் வாழ்க்கைக்கு நாம் ஒரு முழுமையான வடிவத்தை கொடுப்பதே இல்லை.........முடிவே இல்லாத ஒரு கரையின் சாம்ராஜியத்தில் இருக்கிறது நமது எல்லோருடைய வாழ்க்கை.................

எனக்கு இந்த பாடல் தான் நியாபகம் வருது....
வீடு வரை மனைவி...
வீதி வரை உறவு...
காடு வரை பிள்ளை..
கடைசி வரை யாரோ........... :)

வாழ்க்கை என்பது ஒரு புரியாத புதிர் பயணம்........பயணத்தில் வாழ்வோமோ இல்லையோ வீழாமல் இருக்க பழகுவோம்......

Wednesday, November 5, 2008

Amma

moonru ezhuththu kavidhai ival.......
paasaththin uraividam ival.......
kandippin kadamai ival..........
azhugum pothellam sirikka vaippaval...
kulammbbum pothu aatharavu tharubaval........
nammudan natpaai iruppaval...............
neril nammudan pesum,vilaiyadum,anbai pozhiyum "kadavul" ival.......