Wednesday, December 30, 2009

அப்பா

பிஞ்சு விரல் கைப்பிடித்து
நடை பழக சொல்லி தந்தாய்....
மழழையில் உன்னை முதன் முதலில் நான் "அக்கா"என்று
அழைத்தபோதும் அகமகிழ்ந்தாய்....
எங்களுக்காக கடினமாய் உழைத்தாய்......
எங்களுக்கு நல்லுடை வாங்கி தந்து
மூன்று தீபாவளிக்கு பழைய உடை நீ அணிந்தாய்.....
ரயில் மற்றும் பேருந்து பயணத்தின் போது
நடைபாதை தின்பண்டம் அனைத்தும் சலைக்காமல் மகிழ்சியோடு வாங்கி தந்தாய்...
நாங்கள் நின்ற இடத்தில் நன்றாக நிற்க நீ இடைவிடாமல் ஓடி கொண்டிருந்தாய்........
நீ சொன்ன அறிவுரைகள் ஏராளம்......
வீட்டினுள் நுழையும் போதே என் பெயர் சொல்லி அழைத்தபடி தான் வருவாய்....
எங்கு சென்றாலும் என்னை பெண்பிள்ளை என்று பாராமல் கூட்டி போவாய்......
நீ எங்கள் மீது காட்டிய பாசங்கள் ஏராளம்.....
இரக்கமாய் இருக்கும் உனக்குள் புற்று நோய் என்னும் கொடிய நோய்.....
நோயால் அவதியுறாமல் நீயோ என்னை பார்த்தவாறே வெகுவிரைவில் சென்று விட்டாய்...
என் இமை மூடும் மட்டும் இந்த வலி என்றும் என் இதயத்தில் நிலைத்திருக்கும்....
நாங்கள் பெரும் வெற்றியை காண இனி நீயில்லை...
சந்தோசத்தை பகிர்ந்திட இனி எனக்கோர் தந்தையில்லை......
பி¡¢வு என்னும் துயரத்தில் எங்களை வீழ்த்திவிட்டு சென்றுவிட்டாய்....
நீ என்னுடன் இருந்த நாட்கள் இனி என் பிறவியில் எப்போது வருமோ?
உனைப்பற்றி எண்ணி கொண்டே இருக்கிறேன்
எனைச்சுற்றி நீ இல்லை......
அந்த கனவுகளை மறந்து விட்டு இனி
எந்த கவிதையை உனக்காய் நான் எழுத?
இன்று இங்கும் அங்கும் உன் அன்பெனும் அழகு முகம்
மங்காமல் மின்னுகின்றன எங்கள் இதயத்தில்.......
எண்ண ஓட்டங்களை வாழ்க்கை ஓட்டங்கள் மறைத்தாலும்
நெஞ்சில் உள்ள உன் அழகு முகம் கவி பேச தவறுவதில்லை.......................