Monday, March 15, 2010

ஐ.டி வாழ்க்கை - 2

இரயில் தடதடக்கும் சத்தம் சங்கீதமாக இருந்தது மூவருக்கும்...சாவித்ரி எப்போதுமே வீட்டின் மேல் பற்று கொண்டவள், இது வரை தனியாக எங்கும் சென்றதே இல்லை, கல்லூரிப் படிப்பு கூட உள்ளூரிலே தான். அவளுக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது...எவ்வாறு ஹாஸ்டலில் தங்க போகிறோம் என்று....
இவர்களுடன் ரெயிலில் இரு தோழர்கள் அறிமுகமாயினர்.....இவர்கள் சாவித்ரி மூலமே அறிமுகமாயினர்....

(அன்று சாவித்த்ரி, அவள் அத்தை ரேகா மற்றும் அவள் அம்மா விமலா மூவரும் பெங்களூர் செல்வதற்காக பெரிய சூட்கேஸ் வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருந்தனர்...ஒரு கடையில் பெரிய சூட்கேஸ் ஐ பார்த்து விலை பேசிக் கொன்டிருந்தனர்..
அப்பொழுது, இருவர் அந்த கடையினுள் நுழைந்து சாவித்ரி பக்கமாக வந்து சூட்கேஸ் வாங்க வேண்டாம் என்று சைகை செய்தனர். புதிதாக யாரோ இருவர் வந்து சைகை செய்ததை பார்த்து பயந்து, அம்மாவிடம் மெதுவாக சாவித்ரி சொல்ல ஆரம்பித்தாள்.
"யாரோ பசங்க ரெண்டு பேர் வாசல்ல நின்னுகிட்டு வாங்க வேண்டாம் ன்னு சொல்றாங்கம்மா" னு அவள் புலம்ப, அத்தை மெதுவாக இருவரையும் கூட்டிக் கொண்டு அந்த கடையை விட்டு வெளியே (நாங்க விலை விசாரித்து விட்டு வருகிறோம் என்று)வந்தாள்... அந்த கடைக்காரருக்கு வாடிக்கையாளர் போய் விடுவாரோ என்ற பயம் ஒருபுறம் இருக்க, அந்த பசங்களை பார்த்து ஒரே முறைப்பு வேறு...

வெளியே வந்தவுடன்,அந்த பசங்களைப் பார்த்து, "என்னப்பா என்ன விசயம், ஏன் வாங்க வேண்டாம்னு சொல்றீங்க?" னு அத்தை விசாரித்தார்...
அவர்களோ, "சாவித்த்ரியை முன்னமே எங்களுக்குத் தெரியும்" ன்னு சொன்னாங்க.
சாவித்த்ரி உடனே "அம்மா எனக்கு இவங்களைத் தெரியவே தெரியாது" னு சொல்ல, ஒரே குழப்பம், அவங்க அம்மா முகத்தில்...."சாவித்த்ரிக்கு எங்களைத் தெரியாது ஆன்டி. எங்களுக்குத் தான் அவளைத் தெரியும்" னு சொல்லி இன்னும் குழப்பம் ஏற்படுத்தினர்.
"நீங்க பெங்களூர் போகத் தானே ஆன்டி சூட்கேஸ் வாங்குறீங்க, நாங்களும் சாவித்த்ரி செலெக்ட் ஆன அதே கம்பெனியில் தான் செலெக்ட் ஆகிருக்கோம், சாவித்த்ரி ஃபோட்டோவை நாங்க ஃபிலேஸ்டு ஆனவங்க லிஸ்ட் ல பாத்துருக்ககோம்" னு சொன்னாங்க .
"இந்த கடைல நாங்க விசாரிச்சோம் ஆன்டி, ரெம்ப விலை சொல்றான். அதான் ஒரே கம்பெனி ல வொர்க் பண்ண போறோம்,அதான் ஒரு சின்ன ஹெல்ப், நாங்க இப்ப தான் சூட்கேஸ் வாங்கினோம்" னு சொல்லி ஒரு கடையில் மிகவும் மலிவாக வாங்கித் தந்தனர்.
ரொம்ப தேங்க்ஸ் னு சொல்லி அப்போ தான் சாவித்த்ரி அவங்க பெயரையேக் கேட்டாள்.
அப்பாடா, இப்பவாவது பேசினீங்களே, சந்தோசம் னு சொல்லி அவர்களது பெயரை சொன்னார்கள், ஜெயராம், கல்கி என்று...)

இவர்களை ஒரு நிமிடம் ரெயில் நிலையத்தில் பார்த்ததும், மறுபடியும் பயம் தான் வந்தது சாவித்ரிக்கு... அவள் அம்மா தான் நடந்த கதையை பூமிகா,ராதிகா மற்றும் அவர்களது பெற்றோரிடம் சொன்னார்......நிம்மதி அடைந்தாள் சாவித்த்ரி.

ஆனால் அவர்களின் தோற்றம் அவளுக்கு சிரிப்பைத் தந்தது. ஏன்னா அவங்க மறுநாள் தான் பெங்களூர் போய் சேர்வார்கள், ஆனால் இப்பவே ஸ்வெட்டர், குல்லா, கூலிங் கிளாஸ் எல்லாம் அணிந்திருந்தனர். இன்னும் பெங்களூர் போகவே இல்ல, அதுகுள்ள இவ்வளவு அலட்டலா னு தோணுச்சு சவித்த்ரிக்கு. அதையே அவள் தோழிகளும் கிண்டல் செய்தனர்.

ஏனோ மனதினுள், நாம் பிறந்த ஊரை விட்டு போகிறோமே என்ற எண்ணம் மனதினுள் அழுத்த, அழுகையுடன் தான் சென்றாள் சாவித்த்ரி மட்டும்...............

தொடரும் வாழ்க்கை...................

Monday, March 8, 2010

இன்றைய படிப்பு

அறிவுரைகள் சொல்லி கொடுக்க தவறும் ஆசிரியர்....

ஆசிரியர்களின் கோவத்தை பொறுக்காத மாணவர்கள்....

பேருந்து நெரிசலில் ஆசிரியர் நிற்பதை பார்த்து சந்தோசப்படும் மாணவர்கள்...

புரிந்தும் புரியாமலும் நோட்ஸ் எடுக்கும் வகுப்பறைகள்...

ஏன் என கேள்வி கேட்க தெரியாத சிந்தனையாளர்கள்.....

தான் எடுப்பது தனக்கே ஒரு தரம் கேட்டால் என்ன என்று சொல்ல தெரியாமல் விழிக்கும் அரை குறை ஆசிரியர்கள்..............

முப்பது நிமிடங்களுக்கு மேல் பொறுமையாக கவனிக்க முடியாமல் நெளியும் மாணவர்கள்,

சிந்தனைகளை வளர்க்காத , பாஸ் செய்ய மட்டும் செய்தால் போதும் என சொல்லும் மேலாளர்கள்,

இதற்கோ மாலை முழுவதும் ஸ்பெஷல் கிளாஸ்.....

இப்படி அரை குறை கல்வியில் கழிகிறது இன்றைய படிப்பு.........

ஐ.டி வாழ்கை - 1

கதை எழுதனும்னு ரெம்ப நாளாக நெனச்சேன்..இப்பொழுது தொடர்கிறேன் என் கதையை..இது உண்மையும் கொஞ்சம் கற்பனையும் கலந்த கதை....

அவர்கள் மூன்று பேர் ராதிகா,பூமிகா,சாவித்த்ரி ..

மூணு பேரும் ஒரே காலேஜ் ல படிச்சு கேம்பஸ் ல செலக்ட் ஆயிட்டாங்க...

சாவித்திரி,ராதிகா ஒரே கிளாஸ் பட் பூமிகா வேற டிபாட்மென்ட்..

இருந்தாலும் ஒரே கம்பெனி ல வேல கிடைச்ச திருப்தியில் எல்லோரும் நண்பர்களாக பழகினர்..

அன்று தான் முதல் நாள் எல்லோரும் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டு ரெயிலுக்காக காத்துகொண்டு இருந்தனர்...பலர் கண்ணில் சந்தோசங்கள்,சிலர் கண்ணில் பயங்கள்......பரபரப்பாக இருந்தது ரெயில் நிலையம்...

வெவேறு காலேஜ் இல் இருந்து அதே கம்பெனியில் செலக்ட் ஆன நிறைய மாணவர்கள் வந்திருந்தனர்..

ஒவ்வொருவர் கண்களிலும் பல சந்தோசங்கள்..புதிதாக ஒரு ஊருக்கு போக போறோம் என்ற மகிழ்ச்சி ஒரு புறம்,பெரிய கம்பெனியில் வேலை பார்க்க போகிறோம் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம்

அவங்க எல்லாம் கேம்பசில் செலக்ட் ஆன பெருமிதத்தோடு வழி அனுப்பி கொண்டிருந்தார்கள் பெற்றோர்கள்....

சில பெற்றோர்கள் உடன் வந்தார்கள்..ரெயில் செலவை கம்பெனி பொறுபேற்கும் என்ற தைரியத்தில் அன்று தான் மற்ற காலேஜ் தோழர்கள்,தோழிகள் பிரஸ்ட் கிளாஸ் ஏசி புக் செய்திருந்தனர்.. இவர்கள் மூவர்கோ தெரியாது ,இதை கேள்வி பட்ட ராதிகாவின் அம்மா மற்றும் சாவித்ரியின் அம்மா மிகவும் வருத்தம் பட்டனர்..இப்படி எதிர்பார்ப்புகளோடு புறப்பட்டது இவர்கள் பயணம்....

சாவித்திரி மற்றும் ராதிகா காலேஜ் முடித்தவுடன் ஒரு சிறிய கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தனர்...(சாப்ட்வேர் டெவலப்பர் )

அங்கிருந்த தோழர்கள் அவர்களை வழி அனுப்ப வந்திருந்தனர்.....

பல வித எதிர்பார்புகளோடு புறப்பட்டது பயணம்.................

தொடரும் வாழ்கை....