Monday, March 15, 2010

ஐ.டி வாழ்க்கை - 2

இரயில் தடதடக்கும் சத்தம் சங்கீதமாக இருந்தது மூவருக்கும்...சாவித்ரி எப்போதுமே வீட்டின் மேல் பற்று கொண்டவள், இது வரை தனியாக எங்கும் சென்றதே இல்லை, கல்லூரிப் படிப்பு கூட உள்ளூரிலே தான். அவளுக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது...எவ்வாறு ஹாஸ்டலில் தங்க போகிறோம் என்று....
இவர்களுடன் ரெயிலில் இரு தோழர்கள் அறிமுகமாயினர்.....இவர்கள் சாவித்ரி மூலமே அறிமுகமாயினர்....

(அன்று சாவித்த்ரி, அவள் அத்தை ரேகா மற்றும் அவள் அம்மா விமலா மூவரும் பெங்களூர் செல்வதற்காக பெரிய சூட்கேஸ் வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருந்தனர்...ஒரு கடையில் பெரிய சூட்கேஸ் ஐ பார்த்து விலை பேசிக் கொன்டிருந்தனர்..
அப்பொழுது, இருவர் அந்த கடையினுள் நுழைந்து சாவித்ரி பக்கமாக வந்து சூட்கேஸ் வாங்க வேண்டாம் என்று சைகை செய்தனர். புதிதாக யாரோ இருவர் வந்து சைகை செய்ததை பார்த்து பயந்து, அம்மாவிடம் மெதுவாக சாவித்ரி சொல்ல ஆரம்பித்தாள்.
"யாரோ பசங்க ரெண்டு பேர் வாசல்ல நின்னுகிட்டு வாங்க வேண்டாம் ன்னு சொல்றாங்கம்மா" னு அவள் புலம்ப, அத்தை மெதுவாக இருவரையும் கூட்டிக் கொண்டு அந்த கடையை விட்டு வெளியே (நாங்க விலை விசாரித்து விட்டு வருகிறோம் என்று)வந்தாள்... அந்த கடைக்காரருக்கு வாடிக்கையாளர் போய் விடுவாரோ என்ற பயம் ஒருபுறம் இருக்க, அந்த பசங்களை பார்த்து ஒரே முறைப்பு வேறு...

வெளியே வந்தவுடன்,அந்த பசங்களைப் பார்த்து, "என்னப்பா என்ன விசயம், ஏன் வாங்க வேண்டாம்னு சொல்றீங்க?" னு அத்தை விசாரித்தார்...
அவர்களோ, "சாவித்த்ரியை முன்னமே எங்களுக்குத் தெரியும்" ன்னு சொன்னாங்க.
சாவித்த்ரி உடனே "அம்மா எனக்கு இவங்களைத் தெரியவே தெரியாது" னு சொல்ல, ஒரே குழப்பம், அவங்க அம்மா முகத்தில்...."சாவித்த்ரிக்கு எங்களைத் தெரியாது ஆன்டி. எங்களுக்குத் தான் அவளைத் தெரியும்" னு சொல்லி இன்னும் குழப்பம் ஏற்படுத்தினர்.
"நீங்க பெங்களூர் போகத் தானே ஆன்டி சூட்கேஸ் வாங்குறீங்க, நாங்களும் சாவித்த்ரி செலெக்ட் ஆன அதே கம்பெனியில் தான் செலெக்ட் ஆகிருக்கோம், சாவித்த்ரி ஃபோட்டோவை நாங்க ஃபிலேஸ்டு ஆனவங்க லிஸ்ட் ல பாத்துருக்ககோம்" னு சொன்னாங்க .
"இந்த கடைல நாங்க விசாரிச்சோம் ஆன்டி, ரெம்ப விலை சொல்றான். அதான் ஒரே கம்பெனி ல வொர்க் பண்ண போறோம்,அதான் ஒரு சின்ன ஹெல்ப், நாங்க இப்ப தான் சூட்கேஸ் வாங்கினோம்" னு சொல்லி ஒரு கடையில் மிகவும் மலிவாக வாங்கித் தந்தனர்.
ரொம்ப தேங்க்ஸ் னு சொல்லி அப்போ தான் சாவித்த்ரி அவங்க பெயரையேக் கேட்டாள்.
அப்பாடா, இப்பவாவது பேசினீங்களே, சந்தோசம் னு சொல்லி அவர்களது பெயரை சொன்னார்கள், ஜெயராம், கல்கி என்று...)

இவர்களை ஒரு நிமிடம் ரெயில் நிலையத்தில் பார்த்ததும், மறுபடியும் பயம் தான் வந்தது சாவித்ரிக்கு... அவள் அம்மா தான் நடந்த கதையை பூமிகா,ராதிகா மற்றும் அவர்களது பெற்றோரிடம் சொன்னார்......நிம்மதி அடைந்தாள் சாவித்த்ரி.

ஆனால் அவர்களின் தோற்றம் அவளுக்கு சிரிப்பைத் தந்தது. ஏன்னா அவங்க மறுநாள் தான் பெங்களூர் போய் சேர்வார்கள், ஆனால் இப்பவே ஸ்வெட்டர், குல்லா, கூலிங் கிளாஸ் எல்லாம் அணிந்திருந்தனர். இன்னும் பெங்களூர் போகவே இல்ல, அதுகுள்ள இவ்வளவு அலட்டலா னு தோணுச்சு சவித்த்ரிக்கு. அதையே அவள் தோழிகளும் கிண்டல் செய்தனர்.

ஏனோ மனதினுள், நாம் பிறந்த ஊரை விட்டு போகிறோமே என்ற எண்ணம் மனதினுள் அழுத்த, அழுகையுடன் தான் சென்றாள் சாவித்த்ரி மட்டும்...............

தொடரும் வாழ்க்கை...................

9 comments:

வி.பாலகுமார் said...

நல்ல் நடை.
அழுகையுடன் தொடர்ந்த பயணம், எப்படி இருந்தது. தொடருங்கள். :)

isakki said...

sakthi, idhu enna love storyyaa illa family storyaa illa yethavathu penniyaa kadhayaa,illa oruvaelai thriller storyaa,
ethuvaa irunthaalaum adutha varathukkulla clue koduthurungaa !!!

nalla irunthathu sakthi

சத்யா said...

/balakumar/
thanks ....
/isakki/
normal story .......real story also..
read continuously...i will tell u later....

ஜெரி ஈசானந்தன். said...

அனைத்து பதிவுகளும் நன்றாகவே இருக்கிறது, சகோதரி, இன்னும் நிறைய எழுதுங்கள்.

shakthi said...

Unmaiyana peyarkalai vachu ezhuthalame?

சத்யா said...

thanks jeri varukaiku nanri..
thanks shakthi

அவனி அரவிந்தன் said...

@சத்யா,
அடர்ந்த வனாந்திரத்தில் உலவும் போது அழகிய பூக்களை ரசிக்க சில நிமிடங்களை செலவு செய்வது போல உங்களின் பெரும்பாலான பதிவுகளை இன்று வாசித்தேன். சீரிய கருத்துகளை, சிறப்பான மொழி நடையில் எழுதுறீங்க. எனக்கும் மதுரை தான்.
- அவனி அரவிந்தன்.
www.vennilapakkangal.blogspot.com

சத்யா said...

thanks a lot aravind

வித்யாசன் said...

சில மணி துளிகள் வாசித்தேன். சற்று சிலிர்த்தேன். பெண்களின் கற்பனை பலமானது என்பதை விட பஞ்சை விட மென்மையானது. அதன் சுகம் கற்பனையின் ஆழத்தில் நீந்துபவருக்கு மட்டுமே எட்டக் கூடிய ஒன்று. மதுரை பெண்மணி எனும்போது எனக்குள் அதீத கர்வம். நானும் மதுரை என்ற போது. உங்களோடு நட்பு கொள்ள ஆசைபடுகிறேன். விருப்பமெனில் தொடரலாம். எனது அலைபேசி எண். 8012836906.